/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துணை முதல்வர் உதயநிதி இன்று விழுப்புரம் வருகை
/
துணை முதல்வர் உதயநிதி இன்று விழுப்புரம் வருகை
ADDED : நவ 05, 2024 06:41 AM

விழுப்புரம்; விழுப்புரத்தில் நாளை, துணை முதல்வர் உதயநிதி தலைமையில் ஆய்வு கூட்டம் நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று மாலை 4:00 மணிக்கு துணை முதல்வர் உதயநிதிக்கு, விக்கிரவாண்டியில் அமைச்சர் பொன்முடி தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து மாலை 5:30 மணிக்கு, திருவெண்ணெய் நல்லுாரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார். இதையடுத்து, விழுப்புரம் அரசு சட்டக் கல்லுாரியில் நடைபெறும் நிகழ்ச்சியில், விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்களை வழங்குகிறார்.
இதையடுத்து, நாளை (6ம் தேதி) விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில், காலை 10:00 மணிக்கு, கலைஞர் நுாலகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் காலை 10:30 மணியளவில், மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து, துணை முதல்வர் உதயநிதி தலைமையில் ஆய்வு கூட்டம் நடக்கிறது.
இதில், வனத்துறை அமைச்சர் பொன்முடி, கலெக்டர் பழனி மற்றும் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.