/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ராம சரவணன்-செல்வி இல்ல திருமணம் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு
/
ராம சரவணன்-செல்வி இல்ல திருமணம் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு
ராம சரவணன்-செல்வி இல்ல திருமணம் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு
ராம சரவணன்-செல்வி இல்ல திருமணம் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு
ADDED : ஆக 29, 2025 12:13 AM

விழுப்புரம்: விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., பிரமுகர் ராம சரவணன் இல்ல திருமண விழாவை துணை முதல்வர் உதயநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மாவட்ட செயலர்கள் மஸ்தான், லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் ராமசரவணன்-மாவட்ட கவுன்சிலர் செல்வி ஆகியோரின் மகள் சாய்ஸ்ரீ; மோகன்குமார் - நளினி ஆகியோரின் மகன் ஜீனத்பிரியன்; ஆகியோரது திருமணவிழா, சென்னையில், துணை முதல்வர் உதயநிதியின் குறிஞ்சி இல்லத்தில் நேற்று நடந்தது.
உதயநிதி தலைமை தாங்கி, திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தி பேசினார். ஸ்ரீராம்குழும தாளாளர் வித்யா ராமசரவணன் வரவேற்றார்.
திருமண விழாவில், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., வி.சி., கட்சி மாநில துணை பொது செயலாளர் பாலாஜி எம்.எல்.ஏ., தி.மு.க., மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் ஜெயச்சந்திரன், இளைஞரணி மாநில துணை செயலாளர் அப்துல்மாலிக், செஞ்சி பேரூ ராட்சி தலைவர் மொக்தியார்அலி, மேல்மலையனுார் ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன், தயாளன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா, ஒன்றிய செயலாளர் நாராயணமூர்த்தி உள்ளிட்ட கட்சியினர், உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.