/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துணை முதல்வர் பிறந்த நாள் விழா
/
துணை முதல்வர் பிறந்த நாள் விழா
ADDED : டிச 08, 2025 06:41 AM

விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, கேக் வெட்டியதோடு பொதுமக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
நகர அவை தலைவர் கற்பகமூர்த்தி, பொறுப்பாளர் வெற்றிவேல், கவுன்சிலர்கள் சாந்தாராஜ், புருஷோத்தமன், வழக்கறிஞர் லெனின் விஜய், நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை விழுப்புரம் மந்தகரை பகுதியில் அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் ராஜா, மீனவரணி தலைவர் ராஜா, சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் முகமதுஅலி, முன்னாள் நகர மன்ற துணை தலைவர் பார்த்திபன், நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சண்முகம், வீரப்பன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பாஸ்கர் ஆகியோர் செய்திருந்தனர்.

