/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
5ம் தேதி துணை முதல்வர் வருகை மாவட்ட செயலாளர் தகவல்
/
5ம் தேதி துணை முதல்வர் வருகை மாவட்ட செயலாளர் தகவல்
5ம் தேதி துணை முதல்வர் வருகை மாவட்ட செயலாளர் தகவல்
5ம் தேதி துணை முதல்வர் வருகை மாவட்ட செயலாளர் தகவல்
ADDED : அக் 30, 2024 04:56 AM
விழுப்புரம் : 'வரும் 5ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்திற்கு துணை முதல்வர் உதயநிதி விழுப்புரம் வருகை தருகிறார்' என தெற்கு மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
துணை முதல்வர் உதயநிதி, விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதற்காக சென்னையிலிருந்து காரில் வரும் துணை முதல்வருக்கு, நவம்பர் 5ம் தேதி மாலை 4:00 மணிக்கு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தி.மு.க., சார்பில் வரவேற்பளிக்கப்படுகிறது.
மாலை 4:30 மணிக்கு திருவெண்ணைநல்லுாரில் கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார். 6:00 மணிக்கு விழுப்புரம் அரசு சட்டக் கல்லுாரி அரங்கில், அரசு நிகழ்வாக நடக்கும் விளையாட்டுத்துறை சார்பில் மண்டல அளவிலான விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்களை வழங்குகிறார்.
விழுப்புரத்தில் இரவு தங்கி, மறுநாள் 6ம் தேதி காலை 9:30 மணிக்கு கிழக்கு பாண்டி ரோடில், தி.மு.க., இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நுாலகத்தை திறந்து வைக்கிறார்.
இதனையடுத்து, காலை 10:00 மணிக்கு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் அரசு துறை ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கிறார். மதியம் நிகழ்ச்சி முடிந்து, தஞ்சாவூர் புறப்பட்டுச் செல்கிறார்.
இவ்வாறு கவுதமசிகாமணி கூறினார்.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், மாவட்ட துணைச் செயலாளர் முருகன் உடனிருந்தனர்.