/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு
/
வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு
ADDED : ஆக 14, 2025 01:21 AM

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறைகளின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். இதில், தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாடுகள், முன்னேற்றப் பணிகளின் விவரம் மற்றும் நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து ஆய்வு நடைபெற்றது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி, பொதுப்பணி, இந்து சமய அறநிலையத்துறை, பேரூராட்சிகள், கூட்டுறவு, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள், வேளாண்மை, வேளாண்மை பொறியியல் பிரிவு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், சிட்கோ, சுகாதார நலப்பணிகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தொழிலாளர் நலத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், நுகர்பொருள் வாணிபக்கழகம், நீர்வளம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட அலுவலர்களிடம் கலந்தாய்வு நடந்தது.
மேலும் நகராட்சி நிர்வாகம், மாவட்ட தொழில் மையம், நெடுஞ்சாலைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாடு திட்ட அலகு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வனத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலர்களிடம் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில், டி.ஆர்.ஓ., அரிதாஸ், திண்டிவனம் சப்-கலெக்டர் ஆகாஷ், டி.ஆர்.ஓ., ராஜகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.