விக்கிரவாண்டியில் வளர்ச்சி திட்ட பணிகள் : கூடுதல் கலெக்டர் ஆய்வு
விக்கிரவாண்டியில் வளர்ச்சி திட்ட பணிகள் : கூடுதல் கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூன் 25, 2026 03:55 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியத்தில் ரூ. 48 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் கலெக்டர் ஆனந்தகுமார் சிங் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஆனந்தகுமார் சிங் நேற்று தொரவி ஊராட்சியில் பள்ளிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிட பணி, தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டுமான பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறினர்.
தொடர்ந்து மேலகொந்தையில் நர்சரி பண்ணையை பார்வையிட்டு மரக்கன்றுகள் பராமரிக்கும் முறை மற்றும் எத்தனை பேர் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயன் பெறுகின்றனர் என்பதை கேட்டறிந்தார். வி.சாலை அடைக்கலாபுரத்தில் புதியதாக கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை பார்வையிட்டார்.
பி.டி.ஓ., அலுவலகத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்த நாளையொட்டி மரக்கன்று நடப்பட்டது. ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவி துரை, விழுப்புரம் பெடரல் பேங்க் சீனியர் மேலாளர் சுராஜ், பி.டி.ஓ.,க்கள் சாகிதா பாணி, பாலச்சந்திரன், பொறியாளர்கள் சதீஷ், பாலாஜி, சுப்பிரமணி, துணை பி.டி.ஓ., பாபு உட்பட பலர் உடனிருந்தனர்.
