/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாணவர்களுக்கு வளரி பயிற்சி முகாம்
/
மாணவர்களுக்கு வளரி பயிற்சி முகாம்
ADDED : பிப் 07, 2024 07:45 AM

விழுப்புரம் : விழுப்புரம் ரோட்டரி சங்கம், டி.என்.ஆர்.எஸ்., அன்பு சிலம்பம் மற்றும் கராத்தே அறக்கட்டளை சார்பில் வளரி பயிற்சி முகாம் நடந்தது.
விழுப்புரம் தி நியூ ஜான்டூயி பள்ளியில் நடந்த முகாமில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்றனர். பயிற்சியாளர்கள் சுரேஷ், தினேஷ், டி.என்.ஆர்.எஸ்., அன்பு சிலம்பம் மற்றும் கராத்தே அறக்கட்டளை பயிற்சியாளர் அன்பரசி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்கத் தலைவர் கன்யா ரமேஷ் தலைமை தாங்கினார்.
ஜான்டூயி பள்ளி நிர்வாகிகள் வீரதாஸ், எமர்சன் ராபின், சுகன்யா முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி சிறப்புரையாற்றி, மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் சிறப்பாக வளரி பயிற்சி செய்த மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி பாராட்டினார்.
பாக்கியராஜ், கலைசெழியன், ரோட்டரி சங்க பொருளாளர் சுரேஷ்குமார், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

