/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் நகராட்சியில் இந்த ஆண்டில் ரூ.63.72 கோடியில் மேம்பாட்டு பணிகள்
/
விழுப்புரம் நகராட்சியில் இந்த ஆண்டில் ரூ.63.72 கோடியில் மேம்பாட்டு பணிகள்
விழுப்புரம் நகராட்சியில் இந்த ஆண்டில் ரூ.63.72 கோடியில் மேம்பாட்டு பணிகள்
விழுப்புரம் நகராட்சியில் இந்த ஆண்டில் ரூ.63.72 கோடியில் மேம்பாட்டு பணிகள்
ADDED : அக் 01, 2025 01:13 AM

விழுப்புரம் நகராட்சியில் 2025-26ம் ஆண்டில் 63.72 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.
விழுப்புரம் நகராட்சியில், 2025-26ம் ஆண்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், ரூ.4.88 கோடியில் குடிநீர் மேம்பாட்டு திட்டமும், ரூ.58 லட்சத்தில் விழுப்புரம் ஆசாகுளம் மேம்பாட்டு பணிகளும் நடக்கிறது. ரூ.81 லட்சத்தில் மழை நீர் வடிகால் பணியும், அனிச்சம்பாளையத்தில் ரூ.63 லட்சத்தில் சிலாட்டர் ஹவுஸ் அமைக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் நகராட்சி பழைய அலுவலகத்தை இடித்து அகற்றிவிட்டு, ரூ.1.48 கோடியில் புதிய டவுன் ஹால் அமைக்கும் திட்டப்பணி தொடங்கியுள்ளது. ரூ.3.50 கோடியில், சுகாதார திட்டத்தில், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கூடுதல் புதிய கட்டடம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
விழுப்புரம் நகரில் ரூ.52 கோடியில், 95 கி.மீ., அளவிற்கு, சாலை புதுப்பிக்கும் பணிகள் படிப்படியாக நடந்து வருகிறது. பாண்டியன் நகர் பகுதியில், நகராட்சி நிர்வாகம் மூலம், பராமரித்தல் மற்றும் செயல்படுத்துதல் திட்டத்தின் கீழ் ரூ.6.20 கோடி மதிப்பில், பஸ் நிலைய மழைநீர் வெளியேற்றுவதற்காக 1.45 கி.மீ., அளவில் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட மஹாராஜாபுரம் பகுதியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில், புதியதாக நவீன எரிவாயு மின்தகன மேடை கட்டப்பட்டு, இறுதிக் கட்ட பணிகள் நடக்கிறது. விரைவில் பணிகள் முடிந்து, எரிவாயு தகன மையம் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
விழுப்புரம் - சென்னை ரோடு, அய்யங்கோவில்பட்டு அருகே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் ரூ.10.65 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணிகள் விரை ந்து நடந்து வருகிறது. அதே பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் திட கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் குப்பைகளை அகற்றும் திட்ட கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
இந்த வகையில், விழுப்புரம் நகரில் 2025-26ம் ஆண்டில், ரூ.63.72 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் நடந்து வருகிறது.
விழுப்புரம், திண்டிவனம் நகராட்சிகளில், சமீபத்தில் ஆய்வு செய்த நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன்ரெட்டி, விழுப்புரம் மாவட்ட நகராட்சிகளில், ஏராளமான அடிப்படை கட்டமைப்பு பணிகள் நடக்கிறது.
இப்பணிகளை விரைந்து முடித்துமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தி சென்றார். மண்டல இயக்குநர் நாராயணன், விழுப்புரம் நகராட்சி ஆணையர் வசந்தி, பொறியாளர் புவனேஸ்வரி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.