ADDED : பிப் 22, 2026 05:01 AM

அ நிறம் | அளவு
வானுார்: பல்வேறு கட்சியில் இருந்து விலகிய 20க்கும் மேற்பட்டோர் பா.ம.க.,வில் இணைந்தனர்.
வானுார் அடுத்த பொம்மையார்பாளையத்தைச் சேர்ந்தவர் மதன். இவரது தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள பா.ம.க., அலுவலகத்தில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகு முன்னிலையில் பா.ம.க.,வில் இணைந்தனர்.
கிழக்கு ஒன்றிய தலைவர் கலைவாணன், செயற்குழு உறுப்பினர் பெருமாள், வானுார் கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சதீஷ், ஒன்றிய தொழிற்சங்க தலைவர் பச்சையப்பன் உட்பட பலர் உடனிருந்தனர்.
