/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கடலுார், விருத்தாசலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் வரும் 27ம் தேதி 'தினமலர் - நீட்' மாதிரி தேர்வு
/
கடலுார், விருத்தாசலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் வரும் 27ம் தேதி 'தினமலர் - நீட்' மாதிரி தேர்வு
கடலுார், விருத்தாசலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் வரும் 27ம் தேதி 'தினமலர் - நீட்' மாதிரி தேர்வு
கடலுார், விருத்தாசலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் வரும் 27ம் தேதி 'தினமலர் - நீட்' மாதிரி தேர்வு
ADDED : ஏப் 24, 2025 07:24 AM
விருத்தாசலம்: 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'நீட்' மாதிரி தேர்வு, வரும் 27ம் தேதி கடலுார், விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் பிரம்மாண்டமாக நடக்கிறது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு, மே மாதம் 4ம் தேதி நாடு முழுவதும் நடக்கிறது. 23 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுத தயாராகி உள்ளனர். தமிழகம், புதுச்சேரியில் 'நீட்' நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் டாக்டர் கனவினை நிறைவேற்றிட 'தினமலர்' நாளிதழ் சார்பில் 'நீட்' மாதிரி தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு வரும் 27ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.
கடலுார்: 'தினமலர்' நாளிதழ் மற்றும் ஸ்பெக்ட்ரா நிறுவனம் சார்பில் 'நீட்' மாதிரி தேர்வு, கடலுார், நெல்லிக்குப்பம் மெயின்ரோடு கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. தேர்வில் பங்குபெற விரும்பும் மாணவர்கள் 9952252106 என்ற மொபைல் எண்ணில் காலை 10:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை தங்கள் பெயர், முழு விலாசம், மொபைல் எண் மற்றும் இமெயில் முகவரியை வாட்ஸ்ஆப்பில் முன்பதிவு செய்ய வேண்டும்.
விருத்தாசலம்: 'தினமலர்' நாளிதழ், ஜெயப்பிரியா வித்யாலயா இணைந்து நடத்தும் 'நீட்' மாதிரி தேர்வு, விருத்தாசலத்தில், சேலம் புறவழிச்சாலையில் உள்ள பூந்தோட்டம் ஜெயப்பிரியா வித்யாலயா சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடக்கிறது. தேர்வில் பங்குபெற விரும்பும் மாணவர்கள் 97902 25651 என்ற மொபைல் எண்ணில் காலை 10:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை தங்கள் பெயர், முழு விலாசம், மொபைல் எண் மற்றும் இமெயில் முகவரியை வாட்ஸ்ஆப்பில் முன்பதிவு செய்ய வேண்டும்.
விழுப்புரம்: 'தினமலர்' நாளிதழ், சரஸ்வதி சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரி பள்ளியோடு இணைந்து நடத்தும், 'நீட்' மாதிரி தேர்வில் பங்குபெற விரும்பும் மாணவர்கள், 9524781197 என்ற மொபைல் எண்ணில் காலை 10:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை தங்கள் பெயர், முழு விலாசம், மொபைல் எண் மற்றும் இமெயில் முகவரியை வாட்ஸ்ஆப்பில் முன்பதிவு செய்ய வேண்டும்.
கள்ளக்குறிச்சி: 'தினமலர்' நாளிதழ், ஏ.கே.டி., ஐ.ஐ.டி., 'நீட்' அகாடமி இணைந்து நடத்தும், 'நீட்' மாதிரி தேர்வில் பங்குபெற விரும்பும் மாணவர்கள், 98940 09906 என்ற மொபைல் எண்ணில் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 வரை தங்கள் பெயர், விலாசம், மொபைல் எண் மற்றும் இ- மெயில் முகவரியை வாட்ஸ்ஆப்பில் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி. ஆங்கிலம் மற்றும் தமிழில் வினாத்தாள் வழங்கப்படும்.
இது மாதிரி 'நீட்' தேர்வு என்றாலும், தேசிய தேர்வு முகமை நடத்தும் அசல் தேர்வு போன்றே நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே தேசிய தேர்வு முகமை விதித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்துமே தினமலர் -'நீட்' மாதிரி தேர்விலும் பின்பற்றப்பட உள்ளன. எனவே 'நீட்' தேர்வில் பங்கேற்பதற்கான சிறந்த அனுபவத்தை 'தினமலர்' மாதிரி தேர்வில் பங்கேற்பதன் மூலம் பெற முடியும். காலை 9:45 மணிக்கு தேர்வு அறையில் இருக்க வேண்டும்.