ADDED : ஆக 06, 2025 12:59 AM

விழுப்புரம்; விழுப்புரம் அடுத்த நன்னாடு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 'தினமலர் -- பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு, அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அரசின் போட்டி தேர்வுகளை எதிர்கொள்வதற்கும், மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் விரிவான தகவல்களை 'தினமலர் -- பட்டம்' இதழ் வழங்கி வருகிறது.
திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வெளியாகிறது. இந்நிலையில், விழுப்புரம் அடுத்த நன்னாடு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சரஸ்வதி கல்வி குழுமம் சார்பில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் கற்பகாம்பிகை தலைமை தாங்கினார்.
சரஸ்வதி கல்வி குழும தாளாளர் ராஜசேகரன், பொருளாளர் சிதம்பரநாதன், சி.பி.எஸ்.இ., பள்ளி தாளாளர் முத்துசரவணன் ஆகியோர் மாணவர்களுக்கு 'தினமலர் -பட்டம்' இதழை வழங்கினர்.

