/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி விழுப்புரத்தில் கோலாகலமாக துவங்கியது
/
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி விழுப்புரத்தில் கோலாகலமாக துவங்கியது
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி விழுப்புரத்தில் கோலாகலமாக துவங்கியது
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி விழுப்புரத்தில் கோலாகலமாக துவங்கியது
ADDED : அக் 16, 2025 11:38 PM

விழுப்புரம்: 'தினமலர் - பட்டம்' இதழின் இந்தாண்டுக்கான 'பதில் சொல்; பரிசு வெல்' வினாடி வினா போட்டி, விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் நேற்று துவங்கியது.
'தினமலர் - பட்டம்' இதழ் சார்பில், புதுச்சேரி, தமிழக பள்ளி மாணவர்களுக்காக 'பதில் சொல்; பரிசு வெல்' தலைப்பில் வினாடி வினா போட்டி, ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரி 'தினமலர்' நாளிதழ் பதிப்பு சார்பில், இந்தாண்டு மெகா வினாடி வினா போட்டி, புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள, 150 பள்ளிகளில் நடத்தப்பட உள்ளது. இதனை 'தினமலர்- பட்டம்' இதழுடன், புதுச்சேரி ஆச்சார்யா உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனம் இணைந்து நடத்துகிறது.
இந்த வினாடி வினா போட்டி, விழுப்புரத்தில் சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில், தகுதி சுற்றாக முதல் நிலை தேர்வு நேற்று நடந்தது. இதில், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இவர்களுக்கு பொது அறிவு உட்பட 24 வினாக்கள் கேட்கப்பட்டு, 20 நிமிடங்கள் தேர்வு நடத்தப்பட்டது.
அதிக மதிப்பெண் அடிப்படையில் 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு வினாடி வினா போட்டி துவக்க நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியை, புதுச்சேரி 'தினமலர்' நாளிதழ் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான், பயிற்சி கலெக்டர் (ஊரக வளர்ச்சி) இளவரசி, சி.இ.ஓ., அறிவழகன், பள்ளி தாளாளர் ராஜசேகர், நிர்வாக அறங்காவலர் முத்துசரவணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்ற 16 மாணவர்களுக்கான வினாடி வினா போட்டியில் 3 சுற்றுகளாக 8 கேள்விகள் கேட்கப்பட்டன.
சவாலான கேள்விகளை அசத்தலாக எதிர்கொண்டு மாணவர்கள் பதில் அளித்தனர். சில கேள்விகளுக்கு பார்வையாளர்களாக அமர்ந்திருந்த மாணவர்கள் பதில் கூறி பாராட்டுகளை அள்ளினர்.
இறுதியில், 9ம் வகுப்பு மாணவர்கள் சூர்யா, திருமாணிக்கம் அணியினர் முதலிடம் பிடித்து அசத்தினர். 8ம் வகுப்பு மாணவியர் ரிதா, சிந்துஜா அணியினர் இரண்டாம் இடம் பிடித்தனர். முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகள், வினாடி வினா போட்டியின் அடுத்த சுற்றுக்கு தேர்வானது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ' தினமலர்' நாளிதழ் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், பயிற்சி கலெக்டர் (ஊரக வளர்ச்சி) இளவரசி, சி.இ.ஓ., அறிவழகன், புதுச்சேரி ஆச்சாரியா கல்வி நிறுவனத்தின் தலைவர் அரவிந்தன், சரஸ்வதி மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜசேகர், பொருளாளர் சிதம்பரநாதன், நிர்வாக அறங்காவலர் முத்துசரவணன், பள்ளி முதல்வர் யமுனா ஆகியோர் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினர். மேலும், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்தி பேசினர்.
இதேபோல், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மீதமுள்ள பள்ளிகளில் நடக்கும் 'தினமலர்- பட்டம்' இதழின் மெகா வினாடி வினா போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணி, மாநில அளவிலான அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதில், முதலிடம் பிடித்து வெற்றி பெறும் மாணவர்களுக்கு அசத்தலான, அமர்க்களமான பரிசுகள் காத்திருக்கிறது.
அறிவு பெட்டகமாக 'தினமலர் -பட்டம்' இதழ் பள்ளி பாட புத்தகங்களையும், பொது அறிவு விஷயங்களையும் 'தினமலர் -பட்டம்' இதழ் எளிமைப்படுத்தி, தாய் மொழியான தமிழில் அளித்து வருகிறது.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று அனைத்து தரப்பினரின் பேராதரவோடு பட்டம் இதழ் வீறுநடை போட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் அறிவு, அறிவியல் தகவல்கள் ஆகியவற்றுடன் கூடிய நுண்ணறிவை வளர்க்கும் வகையில், 'பட்டம்' இதழில் செய்திகளும், அரிய தகவல்களும் இடம்பெறுவதால், இன்றைய தலைமுறையினருக்கு அறிவு பெட்டகமாக உள்ளது.