/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பனப்பாக்கம் பள்ளியில் 'தினமலர்- - பட்டம்' வினாடி வினா
/
பனப்பாக்கம் பள்ளியில் 'தினமலர்- - பட்டம்' வினாடி வினா
பனப்பாக்கம் பள்ளியில் 'தினமலர்- - பட்டம்' வினாடி வினா
பனப்பாக்கம் பள்ளியில் 'தினமலர்- - பட்டம்' வினாடி வினா
ADDED : நவ 27, 2025 04:54 AM

விக்கிரவாண்டி: 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சாரியா கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் பதில் சொல் பரிசு வெல் வினாடி வினா போட்டி பனப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்தது.
பள்ளியில் நடந்த முதற்கட்ட போட்டியில் 100 கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ மாணவிகள் தேர்வு செய்து 8 குழுக்களாக பிரித்து 2 சுற்று போட்டி நடந்தது. பள்ளி தலைமையாசிரியை எழிலரசி தலைமை தாங்கினார்.
ஒன்றிய கவுன்சிலர் ராஜாம்பாள் சுப்ரமணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்கர், பூவராகவன், ஆசிரியர் சண்முகம் முன்னிலை வகித்தனர். 8 ம் வகுப்பு மாணவர்கள் பாலகுமரன், ஸ்ரீராம்,முதலிடமும், மாணவன் பெருமாள், மாணவி மோனிஷா இரண்டாமிடமும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தொரவி பி.கே.எஸ்., பவுண்டேஷன் நிறுவனர் , அ.தி.மு.க .,மாவட்ட பிரதிநிதி சுப்ரமணி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர்.போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர் ராஜேந்திரன், ஆசிரியைகள் ரேவதி, விஜயலட்சுமி, சுகந்தி, அனிதா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

