/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'தினமலர்' நீட் மாதிரி தேர்வு மாணவி ஜீவிதா முதலிடம்
/
'தினமலர்' நீட் மாதிரி தேர்வு மாணவி ஜீவிதா முதலிடம்
'தினமலர்' நீட் மாதிரி தேர்வு மாணவி ஜீவிதா முதலிடம்
'தினமலர்' நீட் மாதிரி தேர்வு மாணவி ஜீவிதா முதலிடம்
ADDED : ஏப் 28, 2025 04:59 AM
விழுப்புரம்: 'தினமலர்' நாளிதழ் மற்றும் சரஸ்வதி சென்ட்ரல் சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளி இணைந்து நடத்திய நீட் மாதிரி தேர்வில், மாணவி ஜீவிதா முதலிடம் பிடித்தார்.
'தினமலர்' நாளிதழ் மற்றும் சரஸ்வதி சென்ட்ரல் சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளி இணைந்து நேற்று நடத்திய நீட் மாதிரி தேர்வினை மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் எழுதினர். தொடர்ந்து மாணவர்களின் ஓ.எம்.ஆர்., விடைத்தாள் திருத்தப்பட்டு நேற்று மாலை ரிசல்ட் வெளியிடப்பட்டது.
இதில், மாணவி ஜீவிதா 720 மதிப்பெண்ணுக்கு 504 மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்தார். இவர், இயற்பியலில் 80, வேதியியலில்- 124, உயிரியலில் 300 மதிப்பெண் எடுத்தார். மாணவி கீர்த்திகா 502 மதிப்பெண்ணுடன் இரண்டாம் இடம் பிடித்தார்.
மாணவி பூமிகா 464 மதிப்பெண்ணுடன் மூன்றாம் இடமும், மாணவி ரியாஸ்ரீ 453 மதிப்பெண்ணுடனும், நான்காம் இடம், மாணவி இலக்கியா, மாணவர் விஜயசபரி ஆகியோர் 445 மதிப்பெண்ணுடன் ஐந்தாம் இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர்.

