ADDED : ஆக 06, 2025 12:40 AM

திண்டிவனம் : கருவம்பாக்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில், 'தினமலர்-பட்டம்' இதழ், திங்கள் முதல் வெள்ளி வரை வெளிவருகிறது.
இந்நிலையில், திண்டிவனம் நகரம் அரிமா சங்கம் சார்பில் ஒலக்கூர் வட்டாரம், கருவம்பாக்கத்திலுள்ள அரசு நிதியுதவி பெறும் திருவள்ளுவர் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு, தினமலர் பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
பள்ளி நிர்வாகி அண்ணாதுரை தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், திண்டிவனம் நகரம் அரிமா சங்கத்தின் சாசனத்தலைவர் ஓவியர் தேவ், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் சடகோபன் ஆகியோர், மாணவர்களுக்கு பட்டம் இதழை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் குருநாதன், துரைமுருகன், முருகன், தேவகுமார், குமரகுருபரன் மற்றும் ஆசிரியர்கள் இளவரசி, கோமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.