ADDED : ஆக 12, 2025 11:09 PM

விக்கிரவாண்டி : முண்டியம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாணவர்களுக்கு பொது அறிவு திறனை மேம்படுத்தவும், விஞ்ஞான வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், வாசிப்பு திறன் அதிகரிக்கும் வகையிலும், அரசின் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களை தயார் படுத்தும் வகையிலும் விரிவான தகவல்கள், 'தினமலர் -பட்டம்' இதழ் மூலம் வெளியிடபடுகிறது. தற்பொழுது மாணவர்கள் ஆர்வமுடன் பட்டம் இதழை படித்து பயன்பெறுகின்றனர்.
முண்டியம்பாக்கம் அரசு உயர்நிலைபள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி தலைமை தாங்கினார். ஆசிரியர் சுந்தரமூர்த்தி வரவேற்றார்.
ஒன்றிய கவுன்சிலர் இளவரசி ஜெயபால், ஒன்றிய செயலாளர் ஜெயபால் ஆகியோர் மாணவர்களுக்கு, 'தினமலர்-பட்டம்' இதழை வழங்கி பேசினர்.
மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் செல்வம், கல்விக்குழு அசோக்குமார், சுதாகர், விஜயவேலன், அருளானந்தம், லட்சுமி நாராயணன், ஆசிரியர்கள் குணசீலா, ஹேமலதா,சந்திரன், விஸ்வேஸ்வர ஆசிவேல் குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.