/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டாஸ்மாக் கடையை மாற்றக் கோரி புகார் மனு
/
டாஸ்மாக் கடையை மாற்றக் கோரி புகார் மனு
ADDED : ஜூலை 19, 2011 12:29 AM
உளுந்தூர்பேட்டை : மணம்பூண்டி பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை மாற்ற கோரி குமரகுரு எம்.எல்.
ஏ.,விடம் புகார் மனு அளித்தனர். இது குறித்து மணம்பூண்டி கிராம இளைஞர்கள் சிலர் குமரகுரு எம்.எல்.ஏ.,விடம் அளித்துள்ள புகார் மனுவில், திருக்கோவிலூர் தாலுகா மணம்பூண்டி காந்தி ரோட்டில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அதில் ஒன்று மணம்பூண்டியில் உள்ள தனியார் பள்ளி பின்புறம் உள்ளது. இதனால் குடிமகன்கள் பலர் காலி மதுபாட்டில்களை பள்ளி வளாகத்தில் வீசிவிட்டு செல்கின்றனர். பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து துறை அதிகாரிகளிடம் உடனடியாக தொடர்பு கொண்டு, ஒரு வாரத்திற்குள் உரிய நடவவடிக்கை எடுக்குமாறு குமரகுரு எம்.எல். ஏ., அறிவுறுத்தினார்.