/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு
/
ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஆக 23, 2011 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வல்லம் வட்டார நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடந்தது.
செஞ்சியில் நடந்த கூட்டத்திற்கு தேர்தல் பணி வட்டார தலைவர் வித்யா தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் விருஷபதாஸ், திருப்பாணாழ்வார் முன்னிலை வகித்தனர். ஒலக்கூர் வட்டார செயலாளர் கலைவாணன் தேர்தல் அலுவலராக இருந்தார். இதில் வல்லம் வட்டார தலைவராக கோபாலகிருஷ்ணன், செயலராக நடராஜன், பொருளாளராக கோவிந்தன், துணை தலைவர்களாக பரதன், முருகன், வசந்தி, துணை செயலர்களாக வேலாயுதம், வளர்மதி, நீலக்கண்ணன் தேர்வு செய்யப்பட்டனர்.