ADDED : ஆக 23, 2011 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : குடிபோதையில் குளத்தில் மூழ்கிய தொழிலாளி இறந்தார். சேலம்
மாவட்டம் அயோத்தியா பட்டினத்தை சேர்ந்தவர் ராஜா,42. இவர் கிணறுகளில்
கட்டுமான தொழிலாளியாக வேலை செய்து வந்தார். திண்டிவனம் அடுத்த ஒலக்கூர்
பகுதியில் தங்கி வேலை செய்த ராஜா, கடந்த 21 ம் தேதி மாலை 5 மணிக்கு
அங்குள்ள குளத்தில் குளிப்பதற்காக இறங்கினார். குடிபோதையில் இருந்த ராஜா
தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
அவரது மனைவி லலிதா கொடுத்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.