/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொன்முடியின் அரசியல் சகாப்தம் முடிந்தது : தே.மு.தி.க., எம்.எல்.ஏ., பேச்சு ரிஷிவந்தியம் : முன்னாள்
/
பொன்முடியின் அரசியல் சகாப்தம் முடிந்தது : தே.மு.தி.க., எம்.எல்.ஏ., பேச்சு ரிஷிவந்தியம் : முன்னாள்
பொன்முடியின் அரசியல் சகாப்தம் முடிந்தது : தே.மு.தி.க., எம்.எல்.ஏ., பேச்சு ரிஷிவந்தியம் : முன்னாள்
பொன்முடியின் அரசியல் சகாப்தம் முடிந்தது : தே.மு.தி.க., எம்.எல்.ஏ., பேச்சு ரிஷிவந்தியம் : முன்னாள்
ADDED : ஆக 23, 2011 11:47 PM
ரிஷிவந்தியம் : முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சகாப்தம் முடிவுக்கு
வந்துவிட்டதாக தே.மு.தி.க., எம்.எல்.ஏ., வெங்கடேசன் பேசினார்.
தே.மு.தி.க.,
தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ரிஷிவந்தியம் ஒன்றிய
தே.மு.தி.க., சார்பில் சீர்பாதநல்லூரில் பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய
செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் அய்யான், பாலு,
சீத்தாபதி, வெங்கடேசன், ரகு முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் ரமேஷ்
வரவேற்றார். கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் எம்.எல்.ஏ.,
கலந்து கொண்டு ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதையடுத்து
திருக்கோவிலூர் எம்.எல்.ஏ., வெங்கடேசன் பேசியதாவது : லோக்சபா தேர்தலில்
அ.தி.மு. க.,வுடன் எங்கள் கட்சி அமைக்க இருந்த கூட்டணியை தி.மு.க., பல்வேறு
சூழ்ச்சிகள் செய்து தடுத்துவிட்டது. ஆனால் எம்.எல்.ஏ., தேர்தலில்
தே.மு.தி.க.,-அ.தி.மு.க., வெற்றி கூட்டணியாக அமைந்து மகத்தான வெற்றியை
பெற்றது. விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற முடியாது என்று ரிஷிவந்தியம்
தொகுதியில் விஜயகாந்த் போட்டியிடுவதாக எதிர்கட்சியினர் பேசினர்.
விருத்தாசலத்தில் தே.மு.தி.க.,வின் ஒன்றிய செயலாளர் அமோக வெற்றி
பெற்றுள்ளார். நான்கு முறை மந்திரியாக இருந்த பொன்முடி ரிஷிவந்தியம்
தொகுதியில் தேர்தல் நேரத்தில் பேசும்போது, விழுப்புரத்தில் என்னை எதிர்த்து
விஜயகாந்த் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்தேன் என கூறினார். ஆனால்
இவரால் வெற்றிபெற முடிந்ததா? கடந்த தேர்தலில் பெற்ற தோல்வியோடு
பொன்முடியின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது. இவ்வாறு வெங்கடேசன்
எம்.எல்.ஏ., பேசினார். மாநில நிர்வாகி ராஜா சந்திரசேகர், மாவட்ட நிர்வாகி
கருணாகரன், தொகுதி நிர்வாகிகள் பாண்டியன், ஜெயசங்கர், நல்லதம்பி, வசந்தா,
லோகநாதன், மல்லிகா, செல்வம், ராஜாமணி கலந்து கொண்டனர். ராஜபாண்டியன் நன்றி
கூறினார்.