/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாப்பனப்பட்டில் 5 ஆண்டுகளாக பயனற்று கிடக்கும் பள்ளி கட்டடம்
/
பாப்பனப்பட்டில் 5 ஆண்டுகளாக பயனற்று கிடக்கும் பள்ளி கட்டடம்
பாப்பனப்பட்டில் 5 ஆண்டுகளாக பயனற்று கிடக்கும் பள்ளி கட்டடம்
பாப்பனப்பட்டில் 5 ஆண்டுகளாக பயனற்று கிடக்கும் பள்ளி கட்டடம்
ADDED : ஆக 23, 2011 11:52 PM
திண்டிவனம் : விக்கிரவாண்டி ஒன்றியம் பாப்பனப்பட்டு கிராமத்தில்
கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடம் 5 ஆண்டுகளாக திறப்பு விழா செய் யப்படாமல்
உள்ளது.
விக்கிரவாண்டி ஒன்றியம் பாப்பனப்பட்டு கிராமத்தில் 3,500 க்கும்
மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 1963ம் ஆண்டு
முதல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி செயல்பட்டு வந்தது. கடந்த 1993ம்
ஆண்டு இந்த பள்ளி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்வு பெற்றது. தற்போது
இப்பள்ளியில் 189 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பாப்பனப்பட்டு ஊர்
பகுதி மற்றும் காலனி பகுதிக்கும் இடையில் இரண்டு ஏக்கர் பரப்பளவில், போதிய
கட்டட வசதிகளுடன் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1996ம் ஆண்டு
அப்போதைய லோக்சபா எம்.பி., தன்ராஜ் ஒப்புதலின்பேரில் தொகுதி மேம் பாட்டு
நிதியின் மூலம் 3.80 லட்சம் ரூபாய் செலவில் 2 பள்ளி வகுப்பறைகள்
கட்டப்பட்டன. சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாப்பனப்பட்டு கிராமத்தையொட்டி
வயல்வெளியில் அமைக்கப்பட்டுள்ள புதிய பள்ளிக் கட்டடம் 5 ஆண்டுகளாகியும்
திறப்பு விழா நடத்தப்படாமல் உள்ளது.