/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
11,796 வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்கல்
/
11,796 வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்கல்
11,796 வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்கல்
11,796 வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்கல்
ADDED : ஆக 13, 2025 12:19 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், 'முதல்வரின் தாயுமானவர்' திட்டத்தின் படி, 11 ஆயிரத்து 796 ரேஷன் கார்டுதாரர்களுக்கு நேற்று மட்டும், 168 வாகனங்கள் மூலம் ரேஷன் பொருட்கள் நேரடியாக வழங்கப்பட்டன. சென்னையில், காணொளி காட்சி வாயிலாக கூட்டுறவுத்துறை சார்பில் 'முதல்வரின் தாயுமானவர்' திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் ஒன்றியம், சித்தலிங்கமடம் ஊராட்சியில் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில், 'முதல்வரின் தாயுமானவர்' திட்ட துவக்க விழா நடைபெற்றது. திருக்கோவிலுார் எம்.எல்.ஏ., பொன்முடி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி., கவுதமசிகாமணி, டி.ஆர்.ஓ., அரிதாஸ், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் விஜயசக்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், திருவெண்ணெய்நல்லுார் ஒன்றிய சேர்மன் ஓம் சிவசக்திவேல், மாவட்ட கவுன்சிலர் விஸ்வநாதன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர். இதேபோல், செஞ்சியில் எம்.எல்.ஏ., மஸ்தான், விழுப்புரத்தில் எம்.எல்.ஏ., லட்சுமணன், விக்கிரவாண்டியில் எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா ஆகியோர், இத்திட்டத்தை துவக்கி வைத்தனர்.
இத்திட்டத்தின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் அடங்கிய 45 ஆயிரத்து 52 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் நேரடி விநியோகம் செய்யப்பட உள்ளது.
இதன்படி, ரேஷன் கார்டுதாரர்களுக்கு 572 வாகனங்கள் மூலம் ரேஷன் பொருட்களான அரிசி, சக்கரை உள்ளிட்ட பொருட்கள் அவர்களது வீட்டிற்கே சென்று வழங்கபடவுள்ளது.
மாவட்டத்தில் 11 ஆயிரத்து 796 ரேஷன் கார்டுதாரர்களுக்கு நேற்று மட்டும், 168 வாகனங்கள் மூலம் ரேஷன் பொருட்கள் அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்கபட்டது.
இதனால் 16 ஆயிரத்து 940 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் இனி வருங்காலங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் எந்த ஒரு சிரமும் இன்றி ரேஷன் பொருட்களை பெற்று பயன்பெறலாம் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.