/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
/
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 28, 2026 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் துவக்கவுரையாற்றினார். மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மாவட்ட பொருளாளர் யுகந்தி, துணைத் தலைவர் முருகன் முன்னிலை வகித்தனர்.
இதில், புதிய நுாறுநாள் வேலை திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை அமல்படுத்தக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
இதில், நிர்வாகிகள் முத்துவேல், மும்மூர்த்தி, அய்யனார், மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

