ADDED : ஆக 28, 2026 03:45 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில், மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு. டிசம்பர் 3 இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அண்ணாமலை தலைமை தாங்கி பேசினார்.
மாநில மகளிர் அணி செயலாளர் தமிழரசி, தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்ற மாவட்ட தலைவர் அரவிந்தன், புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் பாஸ்கர், மாவட்ட செயலாளர் தமிழரசன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் மாதாந்திர உதவித்தொகையை 3,000 ரூபாயாகவும், நலத்துறை மூலம் வழங்கும் உதவித்தொகை 6,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து அரசு துறைகளிலும் 4 சதவீதம் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
