ADDED : ஜூலை 28, 2025 02:10 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகள் நல சங்கத்தின் சார்பில் மாநாடு நடந்தது. ஒன்றிய தலைவர் அய்யனார் தலைமை தாங்கினார். ஒரத்துார் மகுடமணி வரவேற்றார். மாவட்டச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மாநாட்டினை துவக்கி வைத்து பேசினார்.
இதில், உள்ளாட்சி மாற்றுத்திறனாளிகளுக்கான நியமன பதவியில் வெளிப்படை தன்மையை கடைப்பிடித்து நியமனம் செய்ய வேண்டும்; பைபாஸில் விக்கிரவாண்டி முண்டியம்பாக்கம் பகுதிகளில் கட்டப்படும் மேம்பாலங்களில் மாற்றுத்திறனாளிகள் ஏறி இறங்கும் வகையில் சாய்வு தளம் அமைக்க வேண்டும்; ஓய்வூதிய தொகை பெற மனு செய்து காத்துக்கிடக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலைவர் முருகன், பொருளாளர் செயலாளர் முத்துவேல், மாநில துணை தலைவர் ராதாகிருஷ்ணன்,
மாவட்ட குழு மணிகண்டன், ரங்கபாபு, ஒன்றிய பொருளாளர் உமா, ஒன்றிய தலைவர் மும்மூர்த்தி உள்ளிட்ட பல்வேறு ஒன்றியங்களிலிருந்து மாற்றுத்திறனாளிகள் திரளாக பங்கேற்றனர்.

