/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
/
மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஆக 14, 2025 01:15 AM

விக்கிரவாண்டி : 'விக்கிரவாண்டியில் 100 நாள் வேலை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளி கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமை சங்கத்தின் சார்பில் பாப்பனப்பட்டு, ஒரத்துார், எசாலம், பூண்டி, சின்னத்தச்சூர், அய்யூர் அகரம், சிந்தாமணி கிராமங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்க கோரி ஒன்றிய செயலாளர் மகுடமணி தலைமையில் காத்திருக்கும் போராட்டம் நடந்தது.
மாவட்டச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய தலைவர் அய்யனார் ஆகியோர் பேசினார்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் பி.டி.ஓ., சையது முகமது பேச்சுவார்த்தை நடத்தி, ஒரத்துார், பாப்பனப்பட்டு பகுதி மக்களுக்கு உடனடியாக வேலை வழங்கி உத்தரவிட்டார்.
மற்ற கிராமங்களில் விரைவில் பணி வழங்குவதாக உறுதி கூறினார். இதையடுத்து மாற்று திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

