ADDED : ஜூலை 16, 2025 11:26 PM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கொய்யாதோப்பு பகுதியில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க ஒன்றிய மாநாடு நடந்தது.
ஒன்றிய தலைவர் மும்மூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய குழு உறுப்பினர் குறளரசன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.
வேலையன் வரவேற்றார். மாநில குழு உறுப்பினர் ரவீந்திரன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார்.
மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை செயலாளர் முத்துவேல், துணை தலைவர் அய்யனார் கோரிக்கை குறித்து விளக்கினர். மாநில துணை தலைவர் ராதாகிருஷ்ணன் நிறைவுறையாற்றினார். மாவட்ட குழு மணிகண்டன், மோகன், அன்பழகன், தமிழரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ஆந்திரா அரசு வழங்குவதை போல் ரூ.6,000 வழங்க வேண்டும்; மாவட்டத்தில் காத்திருப்போர் பட்டியலில் மனு செய்து காத்திருப்பவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500 வழங்க வேண்டும்; உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.