/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நாய் கடித்ததால் ஏற்பட்ட தகராறு: வாலிபர் கைது
/
நாய் கடித்ததால் ஏற்பட்ட தகராறு: வாலிபர் கைது
ADDED : மே 15, 2025 11:38 PM
திண்டிவனம்: திண்டிவனத்தில் நாய் துரத்தி கடித்ததால் ஏற்பட்ட தகராறில் வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டிவனம் வகாப்நகரில் வசிப்பவர் தேவராஜ், 65; ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர். இவருடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர் மங்கையர்கரசி, 50; தேவராஜ் நேற்று முன்தினம் மாலை 6.15 மணியளவில், தன்னுடைய பேரக்குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு அருகிலுள்ள சினிமா தியேட்டருக்கு செல்லும் போது, மங்கையர்கரசி வீட்டிலுள்ள நாய்கள் பேரக்குழந்தைகளை துரத்தி கடித்ததாக கூறப்படுகின்றது.
இது தொடர்பாக தேவராஜ், வீட்டின் உரிமையாளரை திட்டியுள்ளார். இந்நிலையில் சினிமாவிற்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்த போது, வீட்டின் வெளியே இருந்த பொருட்கள் சேதமடைந்து கிடந்தது. இதுபற்றி தேவராஜ் திண்டிவனம் டவுன் போலீசில், மங்கையர்கரசி மற்றும் அவரது மகன்கள் 3 பேர் உள்ளிட்ட 6 பேர் மீது புகார் கொடுத்தார். இதே போல் தேவராஜ் மீதும் மங்கையர்கரசியும் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் டவுன் சப் இன்ஸ்பெக்டர் செல்வதுரை வழக்கு பதிவு செய்து, மங்கையர்கரசி மகன் நவீன்குமார், 32; என்பவரை கைது செய்தார்.