/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வழி விடுவதில் தகராறு: 4 பேர் கைது
/
வழி விடுவதில் தகராறு: 4 பேர் கைது
ADDED : ஜன 22, 2024 12:22 AM
விழுப்புரம், -வளவனுார் அருகே சாலையில் வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த சின்னமடம் கிராமத்தைச் சேர்ந்த மனோகர், 30; கூலித் தொழிலாளி. இவர், கடந்த 19ம் தேதி, தனது பைக்கில், நரசிங்கபுரம் வழியாக சென்றார்.
அப்போது, அப்பகுதியை சேர்ந்த முனியப்பன், 48; அவரது மகன்கள் அஜித், 28; அருண்குமார், 21; ஆகியோர் வீட்டின் முன் நின்றிருந்தனர்.
ஓரமாக ஒதுங்கி நிற்கும்படி மனோகர் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த முனியப்பன் மற்றும் அவரது மகன்கள், மனோகரை தாக்கினர். இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
இதில் மனோகர், அஜித் ஆகியோர் காயமடைந்தனர்.
இரு தரப்பு புகாரின் பேரில் மனோகர், அஜித், அருண்குமார், முனியப்பன் ஆகியோர் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.