/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கேமரா பதிவை போலீசாரிடம் காட்டிய தகராறு:2 பேர் கைது
/
கேமரா பதிவை போலீசாரிடம் காட்டிய தகராறு:2 பேர் கைது
கேமரா பதிவை போலீசாரிடம் காட்டிய தகராறு:2 பேர் கைது
கேமரா பதிவை போலீசாரிடம் காட்டிய தகராறு:2 பேர் கைது
ADDED : ஜன 18, 2024 04:14 AM
அவலுார்பேட்டை: வளத்தி அருகே கேமரா பதிவை போலீசாரிடம் காட்டியதில் ஏற்பட்ட தகராறில் 7 பேர் மீது வழக்குப் பதிந்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வளத்தி அடுத்த பின்னனுார் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை, 40. இவரது நண்பர் வெங்கடேசன் வீட்டில் சி.சி.டி.வி., கேமரா வைத்துள்ளார்.
இப்பகுதியில் ஆடு திருடிய சம்பவம் குறித்து வளத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டு கேமரா பதிவினை பார்த்து சென்றுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அதே ஊரை சேர்ந்த சரவணன் 24, லட்சுமணன்42, சேட்டு, பாஸ்கர் ஆகியோர், கேமரா பதிவை ஏன் காட்டினாய் என கேட்டு ஏழுமலையை நேற்று முன்தினம் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஏழுமலையை வேலுார் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இது குறித்து இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில் ஏழுமலை உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிந்து சரவணன், லட்சுமணன் ஆகியோரை வளத்தி போலீசார் கைது செய்தனர்.