ADDED : ஜூலை 29, 2025 05:04 AM
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதியிலும் உள்ள ஓட்டுச்சாவடியில் நியமிக்கப்பட்ட தி.மு.க., பூத் முகவர்களுக்கு, புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக, ஒவ்வொரு பூத்திலும் உள்ள 2 பேருக்கு தலா 1,000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டுள்ளது.இதேபோன்று,திருவண்ணாமலை மாவட்டத்தில், அங்குள்ள மாவட்ட செயலாளர்கள் மூலம் ஒவ்வொரு பூத்திற்கும் தலா 5,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க.,வில் இதுவரை கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பூத் முகவர்களுக்கு பணம் எதுவும் வழங்கவில்லை.விழுப்புரம் மாவட்டத்தில், தி.மு.க.,விற்கு முன்னரே,அ.தி.மு.க.,பூத் கமிட்டியை நியமித்து தேர்தல் பணியை சுறுசுறுப்பாகதுவங்கிய நிலையில்பூத் முகவர்களுக்கு இதுவரை தொகைவழங்காமல்இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க., போன்றுஅ.தி.மு.க., பூத் கமிட்டிக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க., பூத் கமிட்டி உறுப்பினர் மத்தியில் எழுந்துள்ளது.