/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்
/
குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்
ADDED : ஆக 12, 2025 02:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் மகாராஜபுரம் அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடந்தது.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில், தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கி, முகாமினை துவக்கி வைத்தார்.
மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மனோசித்ரா, மாவட்ட தாய், சேய் நல அலுவலர் அம்பிகா, மருத்துவ அலுவலர் ஜோதி மற்றும் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

