/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விடுதியில் சேர விண்ணப்பம் வினியோகம்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
/
விடுதியில் சேர விண்ணப்பம் வினியோகம்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
விடுதியில் சேர விண்ணப்பம் வினியோகம்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
விடுதியில் சேர விண்ணப்பம் வினியோகம்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
ADDED : ஜூன் 12, 2025 12:32 AM
விழுப்புரம் : பள்ளி, கல்லுாரி மாணவர் விடுதிகளில் சேர விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
தமிழக அரசால் விழுப்புரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பள்ளி, கல்லுாரி மாணவர் மற்றும் மாணவிகளுக்கென 35 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தபட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளுக்கு சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும் 18ம் தேதிக்குள், கல்லுாரி விடுதிகளுக்கு சம்மந்தப்பட்ட விடுதிகாப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும் ஜூலை 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும்போது சாதி மற்றும் பெற்றோர் ஆண்டு வருமான சான்றிதழ்கள் ஏதும் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.