/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் துண்டு பிரசுரம் வழங்கல்
/
அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் துண்டு பிரசுரம் வழங்கல்
அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் துண்டு பிரசுரம் வழங்கல்
அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் துண்டு பிரசுரம் வழங்கல்
ADDED : மே 11, 2025 11:46 PM

திருவெண்ணெய்நல்லூர்: அரசூரில் அ.தி.மு.க., ஜெ. பேரவை சார்பில் வீடு வீடாக சென்று திண்ணைப் பிரசார கூட்டம் நடந்தது.
திருவெண்ணெய்நல்லூர் அடுத்த அரசூர் கூட்ரோட்டில் நடந்த திண்ணை பிரசாரத்திற்கு, வடக்கு ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி செயலாளர் பாக்யராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் சண்முகம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஞானவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அரசூர் கூட்ரோடு பகுதியில் வீடுகள் மற்றும் கடைகளுக்கு சென்று அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட சிறப்பு திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
மாவட்ட ஜெ., பேரவை இணை செயலாளர் முருகதாஸ், நிர்வாகி உதயகுமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஹரி ராமன், மாவட்ட பிரதிநிதி இளங்கோ, ஒன்றிய விவசாய அணி தலைவர் மோகன், அரசூர் கிளை கழக செயலாளர்கள் வெங்கடேசன், ரவிச்சந்திரன், அன்பழகன், செந்தில்குமரன், நகரக் கழக செயலாளர் ஸ்ரீதர்,நகர ஜெ. பேரவை செயலாளர் நித்தியானந்தன், நகரக் கழக நிர்வாகிகள் கணேசன்,அப்துல்லா உட்பட பலர் பங்கேற்றனர்.