/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., நிர்வாகிகளுக்கு ரூ.100 நாணயம் வழங்கல்
/
தி.மு.க., நிர்வாகிகளுக்கு ரூ.100 நாணயம் வழங்கல்
ADDED : செப் 24, 2024 12:09 AM
செஞ்சி : தி.மு.க., நிர்வாகிகளுக்கு அமைச்சர் மஸ்தான் 100 ரூபாய் நாணயத்தை வழங்கினார்.
மத்திய அரசு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது.
இந்த நாணயத்தை அமைச்சர் மஸ்தான் நேற்று விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
ஒன்றிய சேர்மன்கள் செஞ்சி விஜயகுமார், வல்லம் அமுதா ரவிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், விஜயராகவன், பச்சையப்பன், செஞ்சி நகர செயலாளர் கார்த்திக், துணை சேர்மன் ஜெயபாலன், பேரூராட்சி துணை சேர்மன் ராஜலட்சுமி, நிர்வாகிகள் தொண்டரணி பாஷா, அமைப்புசாரா தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் தமிழரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

