/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., அரசின் நான்கு ஆண்டு சாதனை விழுப்புரத்தில் இனிப்பு, கையேடு வழங்கல்
/
தி.மு.க., அரசின் நான்கு ஆண்டு சாதனை விழுப்புரத்தில் இனிப்பு, கையேடு வழங்கல்
தி.மு.க., அரசின் நான்கு ஆண்டு சாதனை விழுப்புரத்தில் இனிப்பு, கையேடு வழங்கல்
தி.மு.க., அரசின் நான்கு ஆண்டு சாதனை விழுப்புரத்தில் இனிப்பு, கையேடு வழங்கல்
ADDED : மே 07, 2025 11:52 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கி, மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமையில் இனிப்பு மற்றும் கையேடுகள் வழங்கினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு பொறுப்பேற்று, 4 ஆண்டுகள் நிறைவு பெற்று, 5ம் ஆண்டு துவங்கியுள்ளது. இதையொட்டி, விழுப்புரத்தில் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், பொது மக்களுக்கு இனிப்புகள், சாதனை கையேடு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில், அண்ணாதுரை, கருணாநிதி சிலைக்கு, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, தி.மு.க., அரசின் 4 ஆண்டு சாதனைகளை விளக்கும், கையேடுகள் மற்றும் இனிப்புகளை எம்.எல்.ஏ., லட்சுமணன் மற்றும் கட்சியினர் பொதுமக்கள், வியாபாரிகளிடம் வழங்கினர். கலைஞர் அறிவாலயத்தில் துவங்கி புதிய பஸ் நிலையம், கலெக்டர் அலுவலகம், சிக்னல் சந்திப்பு வழியாக பழைய பஸ் நிலையம் அம்பேத்கர் சிலை வரை நடந்து சென்று, வியாபாரிகள், பொதுமக்களுக்கு சாதனை விளக்க கையேடுகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில், தி.மு.க., மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், நகர செயலாளர் சக்கரை, ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, முருகவேல், பிரபாகரன், செல்வமணி, ராஜி, மைதிலி ராஜேந்திரன், கணேசன், பேரூராட்சி செயலாளர் ஜீவா, செயற்குழு உறுப்பினர் பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர்கள் பஞ்சநாதன், சம்பத், நகர்மன்ற சேர்மன் தமிழ்ச்செல்வி, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், மாவட்ட இளைஞரணி தினகரன், பொறியாளரணி செல்வகுமார், மாணவரணி வினோத் மற்றும் கட்சி நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.