/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ராபி பருவத்திற்கு உளுந்து விதைகள் விவசாயிகளுக்கு வழங்கல்
/
ராபி பருவத்திற்கு உளுந்து விதைகள் விவசாயிகளுக்கு வழங்கல்
ராபி பருவத்திற்கு உளுந்து விதைகள் விவசாயிகளுக்கு வழங்கல்
ராபி பருவத்திற்கு உளுந்து விதைகள் விவசாயிகளுக்கு வழங்கல்
ADDED : அக் 19, 2025 11:52 PM

வானுார்: திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் ராபி பருவத்திற்கு ஏற்ற உளுந்து விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
வானுார் வட்டாரத்தில், நடப்பு ராபி பருவத்தில் 3,200 ஹெக்டர் பரப்பளவில் உளுந்து சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, 40 மெட்ரிக் டன் உளுந்து விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட தயார் நிலையில் உள்ளது.
இதில் விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்யும் வம்பன்-8,10,11 போன்ற ரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்க பயறு வகைகள் திட்டத்தின் கீழ், கிலோவுக்கு ரூ.50 மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.
திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில், ராபி பருவத்திற்கு ஏற்ற உளுந்து விதைகளை வேளாண்மை துணை இயக்குநர் பிரேமலதா வழங்கினார்.
மேலும், உளுந்து விதைகள் தேவைப்படும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில், வானுார் வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ், வேளாண்மை அலுவலர் ரேவதி, துணை வேளாண்மை அலுவலர் செந்தில்குமார், உதவி வேளாண்மை அலுவலர் மஞ்சு, உதவியாளர் (பிணையம்) விஜயகுமார், ஆத்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் கோவிந்தசாமி மற்றும் விவசாயி ஒட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.