/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பக்தர்களுக்கு மஞ்சள் பை வழங்கல்
/
பக்தர்களுக்கு மஞ்சள் பை வழங்கல்
ADDED : ஜன 20, 2025 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பக்தர்களுக்கு தமிழ்நாடு வி.ஏ.ஒ., முன்னேற்ற சங்கத்தினர் சார்பில் மஞ்சள் பை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, சங்க வட்ட தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார். செயலாளர் குமரவேல், பொருளாளர் வினோத்குமார் வரவேற்றனர். வடக்கு மண்டல செயலாளர் பக்கிரிசாமி, மாவட்ட தலைவர் வள்ளல்பாரி முன்னிலை வகித்தனர்.
மாநில தலைவர் பூபதி, பக்தர்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கினார், தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் மேல்மலையனுார் கோவில் நகர லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.