/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாணவர்களுக்கு மஞ்சள் பை வழங்கல்
/
மாணவர்களுக்கு மஞ்சள் பை வழங்கல்
ADDED : ஜூன் 06, 2025 06:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அடுத்த பனப்பாக்கம் அரசு பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு மஞ்சள் பை, மரக்கன்று வழங்கப்பட்டது.
மனப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை எழிலரசி , உலக சுற்றுச்சூழல் தினத்தை வலியுறுத்தி பேசினார். பின்னர் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் மஞ்சள் பை வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள் ராஜேந்திரன், சண்முகம், ரேவதி, நதியா, சுகந்தி,ஜே.ஆர்.சி., மாவட்ட கன்வினர் தமிழழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.