UPDATED : அக் 09, 2026 08:55 PM
ADDED : அக் 09, 2026 05:36 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும், குடிமை பொருள் தனி தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர்கள் மூலம் பொது வினியோகத்திட்ட குறைதீர் முகாம் நடக்கிறது.
இதில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேரத்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் அட்டை, நகல் அட்டை மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்தலுக்கான தனி கோரிக்கை, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அங்கீகார சான்று மனு கொடுக்கலாம்.
ரேஷன் கடை செயல்பாடு, பொருட்களின் தரம், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளிக்கலாம் என கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
