/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இயற்கை இடர்பாடுகளை சீரமைக்க மாவட்ட சேர்மன் ஏற்பாடு
/
இயற்கை இடர்பாடுகளை சீரமைக்க மாவட்ட சேர்மன் ஏற்பாடு
இயற்கை இடர்பாடுகளை சீரமைக்க மாவட்ட சேர்மன் ஏற்பாடு
இயற்கை இடர்பாடுகளை சீரமைக்க மாவட்ட சேர்மன் ஏற்பாடு
ADDED : அக் 22, 2025 12:23 AM

விக்கிரவாண்டி: கனமழை காரணமாக ஏற்படும் இயற்கை இடர்பாடுகளை சீரமைக்க கட்டணமில்லா ஜே.சி.பி.,யை விழுப்புரம் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் ஏற்பாடு செய்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பு:
வானிலை மையம் விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவிப்பை செய்துள்ளது. விழுப்புரம், விக்கிரவாண்டி தாலுகாவில் கன மழையின் போது கிராமங்களில் ஏற்படுகின்ற இயற்கை இடர்பாடுகளை சீரமைக்க ஜே.சி.பி., மற்றும் தண்ணீர் டேங்குகளை கட்டணம் இன்றி பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இச்சேவைக்காக விழுப்புரத்தில் 8 ஜே.சி.பி.,க்கள் மற்றும் 6 தண்ணீர் டேங்குகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் செயல்படும் இந்த சேவை மையத்தை, 9003250330 ,7502263047 மொபைல் எண்களில் தொடர்பு கொண்டால் உடனடியாக தங்கள் பகுதிக்கு ஜே.சி.பி., மற்றும் தண்ணீர் டேங்க் நேரடியாக வந்து தேவையை நிறைவேற்றி தரப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.