UPDATED : ஜூன் 10, 2026 03:02 PM
ADDED : ஜூன் 10, 2026 03:00 PM
திண்டிவனம்: திண்டிவனத்தில் மாவட்ட காங்.,கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
திண்டிவனத்திலுள்ள நகர காங்.,அலுவலகத்தில் காலை, விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்.,கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்.,தலைவர் ரங்கபூபதி தலைமை தாங்கினார். நகர காங்.,பொறுப்பாளர் சத்திஷ்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிர்வாகிகள் ஓ.பி.சி.,மாநில துணை செயலாளர் மணி, மாவட்ட தலைவர் கோவிந்தன், வட்டார தலைவர்கள் அருமைசெல்வம், குமார், கார்த்தி, சுரேஷ், சக்திவேல், நகர தலைவர்கள் சூரியமூர்த்தி, ஞானசேகரன் இளைஞர் காங்., குமார், மற்றும் விஜயன், பார்த்தீபன், அர்ச்சுனன், காதர்மஸ்தான், வெங்கட், சேகர், சீத்தாராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வரும் 19 ம் தேதி ராகுல் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது, வரும் உள்ளாட்சி தேர்தலில் காங்., கட்சி செயல்பாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தில் மறைந்த இயக்குநர் பாரதிராஜா மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
