/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்ட கிரிக்கெட் சங்கம்: வரும் 3ம் தேதி அணி தேர்வு
/
மாவட்ட கிரிக்கெட் சங்கம்: வரும் 3ம் தேதி அணி தேர்வு
மாவட்ட கிரிக்கெட் சங்கம்: வரும் 3ம் தேதி அணி தேர்வு
மாவட்ட கிரிக்கெட் சங்கம்: வரும் 3ம் தேதி அணி தேர்வு
ADDED : ஜூலை 30, 2025 11:13 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் வரும் ஆக., 3ம் தேதி அணி தேர்வு நடக்க உள்ளதாக,  இணை செயலாளர் ரமணன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு;
விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 25 வயதுக்குட்பட்டோருக்கான மாவட்ட அணி தேர்வு நடக்கிறது. விக்கிரவாண்டி சூர்யா கல்லுாரியில் வரும் ஆக., 3ம் தேதி காலை 9:30 மணிக்கு இத்தேர்வு நடக்கிறது.
இதில் பங்கேற்க, கடந்த, 2000ம் ஆண்டு செப்., முதல் தேதி மற்றும் அதற்கு பின் பிறந்திருக்க வேண்டும்.
இத்தேர்வில் பங்குபெறும் அனைத்து வீரர்களும் தங்களது பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் நகல் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 95550 30006 என்ற மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.