/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ஆய்வு
/
ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ஆய்வு
ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ஆய்வு
ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ஆய்வு
ADDED : செப் 18, 2025 11:15 PM

வானுார்: டி. பரங்கனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கிளியனுார் அடுத்த டி.பரங்கனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் கவிதா தீடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவர்களிடையே கல்வி தொடர்பான கேள்விகளை எழுப்பினார்.
அதில் சரியான பதிலளித்த மாணவர்களையும், வழிபாட்டு கூட்டத்தில் பங்கேற்று மாணவர் திறன் வளர்க்கும் செயல்பாடுகளில் ஒன்றான கதை சொல்லும் நிகழ்வில் சுவாரசியமாக கதை கூறிய, 4ம் வகுப்பு மாணவர் சுபிக்க்ஷன், கலையும் கைவண்ணமும் திறன் வளர்க்கும் செயல்பாட்டில் 'பலுான் லைட்' அற்புதமாக செய்த, 5 ம் வகுப்பு மாணவர் நிரஞ்சன் ஆகியோரை பாராட்டினார்.
மேலும் வட்டார அளவிலான கலைத்திருவிழா நிகழ்வில் கிராமத்தில் இயற்கையை பாதுகாப்பவர் குறித்த ஒளிப்பதிவு போட்டியில் முதலிடம் பிடித்த மாணவர் துஷாந்த்தையும் பாராட்டினார்.
ஆய்வின் போது, பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் ஜெய்சாந்தி, ஆசிரியர்கள் சுமதி, வசந்தி, சிவராமன், இளங்கோவன், ஜெகஷீஜா, ரேவதி ஆகியோர் உடனிருந்தனர்.