/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்ட தொழில் மையம் மானிய கடனுக்கான நேர்காணல்
/
மாவட்ட தொழில் மையம் மானிய கடனுக்கான நேர்காணல்
ADDED : மார் 15, 2025 08:47 PM

விழுப்புரம்; முதல் தலைமுறை தொழில் முனைவோர் சுயதொழில் துவங்கிட நீட்ஸ் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெறுவதற்கான நேர்காணல் நடந்தது.
மாவட்ட தொழில் மையம் சார்பில், விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த நேர்காணலுக்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
நேர்காணலில் 9 விண்ணப்பதாரர்கள் முன்மொழிந்த 5.97 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் திட்டங்கள் கூராய்வு செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள், வங்கிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் அருள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜேஷ்வரன், மாவட்ட குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் சங்கத் தலைவர் கருணாநிதி, உள்ளிட்ட தேர்வுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.