/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உறுப்பினர் சேர்க்கையோடு தேர்தல் பிரசாரத்தை துவங்குங்கள்; மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் அறிவுரை

ADDED : ஜூன் 20, 2025 02:15 AM

விழுப்புரம் : 'விழுப்புரம் மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையோடு, தேர்தல் பிரசாரத்தையும் கட்சியினர் துவங்க வேண்டும்' என மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., அறிவுரை வழங்கியுள்ளார்.
விழுப்புரத்தில், மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவர் தலைமை தாங்கி பேசியதாவது:
விழுப்புரம் மத்திய மாவட்ட நிர்வாகிகள், கட்சி தலைமை அறிவுறுத்தியபடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கு தயாராக வேண்டும்.
வரும் 22, 23ம் தேதிகளில் மாவட்டம் முழுதும், ஐ.டி., விங் மூலம் ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
வரும் 25ம் தேதி முதல்வர் ஸ்டாலின் கொளத்துார் தொகுதியில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடங்கியவுடன், நமது மாவட்டம் முழுதும் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் உறுப்பினர் சேர்க்கையை தொடங்க வேண்டும்.
ஒரு பூத்திற்கு 30 சதவீதத்திற்கும் மேலான உறுப்பினர்களை சேர்ப்பதே இலக்காக கொண்டு பணியாற்ற வேண்டும்.
உறுப்பினர் சேர்க்கையின் போதே தமிழக அரசின் சாதனைகளை விளக்கி தேர்தல் பிரசாரத்தையும் துவங்க வேண்டும். இவ்வாறு லட்சுமணன் எம்.எல்.ஏ., பேசினார்.