
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டமங்கலம்: கண்டமங்கலம் மத்திய ஒன்றிய தி.மு.க., சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி மிட்டா மண்டகப்பட்டில் நடந்தது.
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி நடந்த போட்டியை மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்து, வீரர்களுக்கு சீருடை வழங்கினார்.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், ஒன்றிய சேர்மன் வாசன், மத்திய ஒன்றிய செயலாளர் செல்வமணி, விழுப்புரம் நகர இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் சம்பத்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அருள்குமரன், அவைத் தலைவர் மோகன்தாஸ், இளைஞர் அணி அமைப்பாளர் பிரவீன்குமார், மாவட்ட பிரதிநிதி பாலசுப்ரமணியன், தொல்காப்பியன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

