ADDED : பிப் 29, 2024 06:06 AM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் கே.கே., ரோடு, ரகீம் லே-அவுட்டில் உள்ள ரைசிங் ஸ்டார்ஸ் அகாடமியில் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கேரம் போட்டி நடந்தது.
இதில், 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் என தனித்தனியே போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளி முதல்வர் சவுமியா ஆனந்த்ராஜ் தலைமையில் நடந்தது.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழை ஜான்டூயி குரூப் ஆப் இன்ஸ்டியூஷன் நிர்வாக அலுவலர் எமர்சன் ராபின், மாவட்ட கேரம் அசோசியேசன் துணை தலைவர் உதயகுமார் ஆகியோர் வழங்கினர்.
போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தேசிய நடுவர் கோபாலகிருஷ்ணன், கேரம் சங்க செயலாளர் இளஞ்செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
