UPDATED : நவ 25, 2026 06:25 PM
ADDED : நவ 25, 2026 06:25 PM

விழுப்புரம்: விழுப்புரம் பவ்டா தலைமை அலுவலகத்தில், பவ்டா கல்விக் குழும நிறுவனங்களின் பவ்டா ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடந்தது. பவ்டா குழும நிறுவனர் ஜாஸ்லின் தம்பி தலைமை தாங்கினார்.
இதில், அவர் பேசுகையில், ‘விழுப்புரம், கடலுார் மாவட்ட பள்ளிகளை சேர்ந்த, 120 மாணவர்களுக்கும் பவ்டா மாணவர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்குவதற்கான ஏற்பாடு இலவசமாக செய்யப்படும்,’ என்றார்.
தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு துறை மிஷன் ஒலிம்பிக்ஸ்–2036 திட்ட ஆலோசகர் செந்தமிழ் அன்பு, மிஷன் ஒலிம்பிக்ஸ் திட்டம் மூலம் விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்புகள் குறித்தும் பேசினார்.
பவ்டா காப்பீட்டு நிறுவன பொது மேலாளர் ரோல்சன் ஜோஸ் சிறப்புரையாற்றினார். கிளாரிபெல் பள்ளி தாளாளர் பரிமளா முத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
இதில், முதல் 15 இடம் பிடித்தவர்களுக்கு கேடயம், பதக்கம், சான்றிதழ் மற்றும் முதல் 5 இடம் பிடித்த மேல்நிலைப்பள்ளி மற்றும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு பரிசுகளுடன் 25,000 ரூபாய் மதிப்புள்ள ரொக்கம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை பவ்டா ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒருங்கிணைப்பாளர் மோகனசுந்தரம், பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி விளையாட்டுத்துறை இயக்குநர் கோகுல் செய்திருந்தனர்.
