/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்ட அளவில் பெண்களுக்கான விளையாட்டு போட்டி துவக்கம்
/
மாவட்ட அளவில் பெண்களுக்கான விளையாட்டு போட்டி துவக்கம்
மாவட்ட அளவில் பெண்களுக்கான விளையாட்டு போட்டி துவக்கம்
மாவட்ட அளவில் பெண்களுக்கான விளையாட்டு போட்டி துவக்கம்
ADDED : நவ 22, 2024 06:33 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் மாவட்ட அளவில் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழா நடந்தது.
விக்கிரவாண்டி சூர்யா கல்லுாரியில் 14 வயது முதல் 19 வயது வரையிலான பெண்களுக்கு கூடைப்பந்து, கைப்பந்து, கபடி, கோகோ விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. போட்டிக்கு, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில வாலிபால் கழக இணைச் செயலாளர் மணி முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் சீனுவாசன் வரவேற்றார். கல்லுாரி துணை முதல்வர் ஜெகன், பார்மசி கல்லுாரி முதல்வர் அன்பழகன் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்து பேசினர்.
மேலாண்மை கல்லுாரி முதல்வர் பாலாஜி, உடற்கல்வி இயக்குனர்கள் அருண், ராம்குமார், மணிகண்டன், ஹரிதாஸ், செல்வகுமார் உட்பட 8 குறு மைய போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டியில் வெற்றிபெறும் அணிகள் மாநில விளையாட்டில் பங்கேற்க உள்ளனர்.